அதிகாலையே சென்னையில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை..!

சென்னை மாநகர பகுதிகளில் அதிகாலையில் பரவலாக மழை
x

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் பரவலாக கனமழை பெய்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக பட்டினப்பாக்கம், ராயப்பேட்டை, சேப்பாக்கம், மெரினா கடற்கரை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. திடீர் கனமழை காரணமாக சாலைகளின் இரு ஓரங்களிலும் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்