திடீரென வீடு புகுந்து.. மனைவி முன்னே கணவனை கொடூரமாக வெட்டி கொன்ற கும்பல்..தூங்கிக் கொண்டிருந்த போதே நடந்த பயங்கரம்

x
   • ஆவடி அருகே வீட்டில் இருந்தவரை 10 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
   • ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் யோகேஸ்வரன். இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து யோகேஸ்வரனை சரமாரியாக வெட்டினர்.
   • இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அ
   • ப்போது, யோகேஸ்வரன் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
   • இதற்கொடையே, அக்கும்பல் தப்பிச் சென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.
   • முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு யோகேஸ்வரன் சுறா என்பவரது கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
   • இதற்கு பழி தீர்ப்பதற்காக கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Next Story

மேலும் செய்திகள்