'சீட்டா' (CEETA) நுழைவு தேர்வை அறிமுகம் செய்த அண்ணா பல்கலைக்கழகம்

x

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு சீட்டா எனப்படும் தனி நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் எம்பிஏ, எம்சிஏ , எம் இ, எம் டெக், எம்., ஆர்க் உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கு, டான்செட் எனப்படும் Tamilnadu common entrance

test பொது நுழைவு தேர்வு நடத்தப்பட்டு அதில் மாணவர்கள் பெறக்கூடிய மதிப்பெண்கள் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இடங்கள் நிரப்பப்பட்டு வந்தன.

தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு பொறியியல் முதுகலை படிப்புகளுக்கு CEETA- சீட்டா எனப்படும் தனி நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Common Engineering Entrance Test and Admission என்ற இந்த தனி பொது நுழைவு தேர்வு திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதன்படி பொறியியல் முதுகலை படிப்புகளுக்கான நுழைவு தேர்வு, மார்ச் 26ஆம் தேதி காலை நடைபெறும் என்றும், எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி காலை, மாலை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

14 நகரங்களில் நடைபெறும் இந்த நுழைவு தேர்வுகளுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல், 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்