BBC பஞ்சாபி பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டரை தற்காலிக முடக்கம்
• இந்தியாவில் பிபிசி பஞ்சாபியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது.
• காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப், டெல்லி போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
• இதற்கிடையே இணையத்தை உன்னிப்பாக கவனிக்கும் அரசு முகமைகள் கோரிக்கையை ஏற்று, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
• அந்த வகையில் காலிஸ்தான் ஆதரவு செய்திகளை பரப்பிய 6 யூடியூப் சேனல்களை அரசு கோரிக்கையை ஏற்று கூகுள் முடக்கியிருக்கிறது.
• ட்விட்டர் நிறுவனமும் அம்ரித்பால் சிங்கை பின்பற்றிய 120-க்கும் அதிகமானோர் கணக்குகளை சஸ்பென்ட் செய்திருக்கிறது. இந்த சூழலில் பிபிசி பஞ்சாபி பிரிவு அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக முடக்கப்பட்டது.
• சட்ட நடவடிக்கைக்காக இந்த கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் தகவல் தெரிவித்திருந்தது.
• இதேபோன்று பிபிசி பஞ்சாபி கணக்கை கையாண்ட செய்தியாளர்கள் கணக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதை ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
