குரைத்து கொண்டே இருந்த பக்கத்து வீட்டு நாய்.. உயிருடன் புதைத்த 80 வயது மூதாட்டி.. விசாரிக்க சென்ற போலீசையும் மிரளவிட்டார்

x
  • குரைத்துக் கொண்டே இருந்ததால் பக்கத்து வீட்டு நாயை மூதாட்டி ஒருவர் உயிருடன் குழி தோண்டி புதைத்த சம்பவம் பிரேசிலில் நிகழ்ந்துள்ளது...
  • ப்ளானுரா பகுதியில் 82 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார்...
  • இவரது வீட்டின் அருகே உள்ள 33 வயது பெண் வளர்க்கும் செல்ல நாயான நீனா, எப்போதும் இரவில் குரைத்துக் கொண்டே இருப்பதால் தூங்க முடியாமல் எரிச்சல் அடைந்த 88 வயது மூதாட்டி, அந்த நாயைத் தனது தோட்டத்திலேயே இரவோடு இரவாக குழி தோண்டி புதைத்துள்ளார்...
  • திடீரென தனது நாய் காணாமல் போனதால் பரிதவித்துப் போன 33 வயது பெண், இது குறித்து மூதாட்டியிடம் கேட்கவே, நடந்ததைக் கூறியுள்ளார் மூதாட்டி... சுமார் ஒன்றரை மணி நேரமாக குழிக்குள் பரிதவித்த நாய் நீனா உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது..
  • . இது குறித்து நீனாவின் உரிமையாளர் மூதாட்டியிடம் முறையிட்ட போது, "அந்த நாய் இந்தப் பக்கம் இனி வரவே கூடாது" என மிரட்டியுள்ளார்...
  • போலீசார் விசாரித்த போது கூட, "மீண்டும் குரைத்தால் மறுபடியும் குழி தோண்டி புதைப்பேன்" என்று கொஞ்சம் கூட பயமின்றி எச்சரித்து போலீசாரையே மிரள வைத்துள்ளார் மூதாட்டி...

Next Story

மேலும் செய்திகள்