தமிழரை சுட்டு வீழ்த்திய ஆஸ்திரேலிய போலீசார்

x
  • ஆஸ்திரேலியவில் தமிழர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
  • தமிழகத்தைச் சேர்ந்த 32 வயதான மொகமது ரகமதுல்லா சையது அகமது என்ற இளைஞர், ஆபர்ன் ரயில் நிலையத்தில் 28 வயதான தூய்மைப் பணியாளர் ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்...
  • இதையறிந்து அங்கு அருகில் இருந்த காவல் நிலையத்தில் இருந்து போலீசார் விரைந்த நிலையில், அவர்களையும் மொகமது கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்...
  • இதனால் மொகமதை அந்நாட்டு காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்... இதில் அவர் உயிரிழந்தார்...
  • தூய்மைப் பணியாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மொகமது ரகமதுல்லாவுக்கு உளவியல் ரீதியான பிரச்சினை எதுவும் உள்ளதா என்றும், சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்