அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்.. மாற்றி டிக் அடிக்கும் ஈபிஎஸ்? - முன்னாள் MLA Vs முன்னாள் அமைச்சர்

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசார்டில் 8 மணி நேரமாக நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன், கே.வி. ராமலிங்கம், தங்கமணி, சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

வெள்ளி காலை 10 மணிக்கு மேல் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்