அதிமுக வழக்கு - 3வது நாளாக இன்றும் தொடர் விசாரணை

அதிமுக வழக்கு - 3வது நாளாக இன்றும் தொடர் விசாரணை
x

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்றும் 3வது நாளாக தொடர்ந்து நடைபெற உள்ளது.

2022 ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று நடந்த 2வது நாள் விசாரணையில், 2017-ஆம் ஆண்டுக்கு முன் பொதுச் செயலாளருக்கு இருந்த அதிகாரங்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரை கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக மாற்றிவிட்டு பொதுச்செயலாளர் பதவியை நீக்கம் செய்தனர் என, பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதிட்டார்.

அதிமுகவின் அவைத்தலைவர் என்றால் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தலைமேயற்று நடத்துபவரே அவைத்தலைவர் என வைரமுத்து சார்பில் மூத்த வழக்கறிஞர் பதில் அளித்தார்.

இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 3வது நாளாக இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்