"போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை" - ஆவின் எச்சரிக்கை

x
  • மதுரையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் பொதுமேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • மதுரையில் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்துமாறு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்தது.
  • இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் போனது.
  • இதையடுத்து இன்றுமுதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்பாமல், பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக, பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது.
  • இந்நிலையில் ஆவின் பொதுமேலாளர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • கோரிக்கைகளுக்கான தீர்வை மேற்கொள்ளாமல், மிரட்டும் வகையில் அறிவிப்பு வருவதாக, பால் உற்பத்தியாளர்கள் ஆவின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்