காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.05.2025)
புதிதாக வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்து, இனி காத்திருக்க தேவையில்லை... விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் மூலம் உடனடியாக வாக்காளர் அட்டை வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை...
தமிழ்நாட்டில் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடைகிறது... தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், வெயில் படிப்படியாக குறைய வாய்ப்பு
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில், சென்னை அம்பத்தூரில், பாஜக சார்பில் பேரணி...கொட்டும் மழையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நடிகை நமீதா உள்ளிட்டோர் தேசியக் கொடியேந்தி ஊர்வலம்
எல்லையில் பயங்கரவாதிகள் மீண்டும் தங்கள் முகாம்களுக்கு திரும்பி வருவது தெரிய வந்திருப்பதாக, எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. ஷஷாங் ஆனந்த் பேட்டி... எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்புகள் இருப்பது குறித்தும் தகவல்கள் வருவதாக அறிவிப்பு...
ரஷ்ய அதிபர் புதின் நெருப்போடு விளையாடுகிறார் என்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை... தான் இல்லை என்றால், ரஷ்யாவுக்கு மிகவும் மோசமான விஷயங்கள் நடந்திருக்கும் என்பதை புதின் உணரவில்லை என்றும் கருத்து...
லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி, புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை உறுதி செய்தது....228 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, 18.4 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, அசத்தல் வெற்றி...
