36 மணி நேரத்தில் 500 கிமீ.. 3 முறை உலக சாதனை - அமர்க்களப்படுத்திய கோவை மாணவன்

x

இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி, 36 மணி நேரத்தில் 500 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து, கேரளாவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பிரானேஷ் - அர்ச்சனா தம்பதியின் மகன் அஜித் கிருஷ்ணா, கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி 36 மணி நேரத்தில் 500 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து உலக சாதனை படைத்துள்ளார்.

கடந்த 24ஆம் தேதி பாலக்காட்டில் இருந்து பயணத்தை தொடங்கிய அவர், சென்னையை வந்தடைந்தார். அவருக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிறு வயதில் இருந்தே தனக்கு சைக்கிள் பயணத்தில் ஆர்வம் இருப்பதாகவும், தமிழகத்தில் இருந்து யூரோப் வரையிலான ஏழாயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் செல்ல இருப்பதாகவும் அஜித் கிருஷ்ணன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்