காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (12.07.2025) | 11 AM Headlines | Thanthi TV

x
  • செம்மங்குப்பம் லெவல் கிராசிங் கேட் திறந்திருந்ததற்கான ஆதாரங்களை கண்டறிந்தது புலனாய்வு குழு...கேட் கீப்பர், ரயில்வே கேட்டை திறந்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலம்..
  • சூலூரில் லிப்ட் கேட்டு எறி சென்ற பள்ளி மாணவனை, ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டில் வைத்து கொடூரமாக தாக்கிய கும்பல்...மாணவன் படுகாயமடைந்த நிலையில், மது அருந்த வைத்து துன்புறுத்தியதாகபெற்றோர் குற்றச்சாட்டு...
  • தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்கள்...ஒரே நேரத்தில் 3 சிறார்கள் இறந்ததால் சோகத்தில் மூழ்கிய திருவேங்கடஉடையான்பட்டி கிராமம்
  • மத்தியப்பிரதேச மாநிலம் மந்தாகினி நதியில் வெள்ளப்பெருக்கு...வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்
  • டெல்லி வெல்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் காயம்...7 பேர் மீட்பு...கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்...
  • அகமதாபாத் விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை குறித்து தனிப்பட்ட கருத்து தெரிவிக்க விரும்பவில்லை....முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு...
  • அகமதாபாத் விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு....இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் போயிங் நிறுவனம் அறிவிப்பு
  • உலக புராதன சின்னமாக செஞ்சி கோட்டையை அறிவித்தது யுனஸ்கோ...இந்தியாவில் உள்ள 12 ராணுவ கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு
  • சென்னை பாடி வண்ண மீன்கள் விற்பனை வர்த்தக மைய கட்டிட பணிகள் குறித்து ஆய்வு...குறிப்பு எடுக்காமல் நின்றிருந்த அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு...
  • மீனவர்கள் யாருக்கும் மண்ணெண்ணெய் மானியம் ரத்து செய்யப்படவில்லை என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி
  • ராமநாதபுரத்தில் குரூப் 4 தேர்வு எழுத நேரம் தவறி வந்த தேர்வர்கள்...10க்கும் மேற்பட்டோரை தேர்வெழுத அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய அதிகாரிகள்...
  • தமிழகம் முழுவதும் குரூப் 4 போட்டித் தேர்வு தொடக்கம்...13 லட்சத்து 89 ஆயிரம் தேர்வில் பங்கேற்பு...

Next Story

மேலும் செய்திகள்