மதியம்1 மணி தலைப்புச் செய்திகள் (12.07.2025) | | Thanthi TV
- விழுப்புரம் மாவட்டம் வாக்கூர் கிராமத்தில் குடும்ப பிரச்சினையில் துப்பாக்கிச்சூடு...கவலைக்கிடமான நிலையில் மூவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி...
- கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்....விபத்து தொடர்பாக ரயில்வே ஊழியர்களிடம் சிதம்பரம் போலீசார் விசாரணை...
- செம்மங்குப்பம் லெவல் கிராசிங் கேட் திறந்திருந்ததற்கான ஆதாரங்களை கண்டறிந்தது புலனாய்வு குழு...கேட் கீப்பர், ரயில்வே கேட்டை திறந்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலம்..
- செங்கல்பட்டு அருகே குழந்தைகள் நல காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்...காப்பக உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்தது கூடுவாஞ்சேரி மகளிர் காவல்துறை...
- தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு....
- தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்கள்...ஒரே நேரத்தில் 3 சிறார்கள் இறந்ததால் சோகத்தில் மூழ்கிய திருவேங்கடஉடையான்பட்டி கிராமம்
- திண்டுக்கல்லில் காலதாமதமாக வந்ததாக கூறி குரூப் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி...அழுது புலம்பி சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு....
- மதுரையில் குரூப் 4 வினாத்தாள்கள் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட விவகாரம்....மதுரை ஆட்சியர் விசாரணை அறிக்கை சமர்ப்பித்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் டிஎன்பிஎஸ்சி தலைவர் உறுதி
- ராமநாதபுரத்தில் குரூப் 4 தேர்வு எழுத நேரம் தவறி வந்த தேர்வர்கள்...10க்கும் மேற்பட்டோரை தேர்வெழுத அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய அதிகாரிகள்...
- அரசின் நான் முதல்வன் திட்டம் படுதோல்வி என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்..திறன் பயிற்சிக்காக சேரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு...
- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருகிற 25ஆம் தேதி எம்.பியாக பதவி ஏற்பு....ராஜ்யசபா எம்.பியாக தேர்வாகியுள்ள தி.மு.கவைச் சேர்ந்த 3 பேரும் வருகிற 25ஆம் தேதி பதவி ஏற்கிறார்கள்...
- திமுகவுடனான கூட்டணியில் அதிருப்தி இல்லை என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டம்...2026ல் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் திமுக ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை...
- போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களால் மிக மோசமான நிலையில் தமிழகம்...அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
- தி.மு.க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு...2026 தேர்தல் பணி தொடர்பாக திண்டுக்கல், வேடசந்தூர், வேப்பனஹள்ளி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை
- போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களால் மிக மோசமான நிலையில் தமிழகம்...அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
- பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை...காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி...
- அகமதாபாத் விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை குறித்து தனிப்பட்ட கருத்து தெரிவிக்க விரும்பவில்லை....முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு...
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணம் என்ன? 15 பக்கங்களை கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டது விமான விபத்து புலனாய்வு பணியகம்...
Next Story
