காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (09.07.2025) | ThanthiTV

• கேரளாவில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தில் கைக்கோர்த்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி... • நெல்லையில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகைமூட்டம்.... • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்தது.. • பீகார் மாநிலத்தில் முழு அடைப்புக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் போராட்டம்... • பொது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என தலைமைச் செயலாளர் அறிவிப்பு... • நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்வதற்கான பேருந்து சேவை பாதிப்பு... • சென்னையில் பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இல்லை என போக்குவரத்து துறை அறிவிப்பு... • திருவாரூரில் கள ஆய்வு மேற்கொள்ள சென்னையில் இருந்து புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்... • 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்... • பொது வேலை நிறுத்தத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளதாக அறிவிப்பு... • பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடக்கம்... • மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பெய்த தொடர் கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கும் வீடுகள்...படகுகள் மூலம் பொதுமக்களை மீட்கும் பணி தீவிரம்... • குஜராத்தில் மிகவும் பழைமையான ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு... டேங்கர் லாரி அந்தரத்தில் தொங்கியவாறு நிற்கும் நிலையில் மீட்பு பணி தீவிரம் • ஐதரபாத்தை சேர்ந்த தொழிலதிபரிடம் 2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு...தொழிலதிபர் அஜய் வாண்டையார் உள்ளிட்ட 4 பேருக்கு போலீஸ் காவல்... • திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், போலீஸ் விசாரணையின் போது மரணமடைந்த விவகாரம்...த.வெ.க சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல்...
X

Thanthi TV
www.thanthitv.com