குஜராத் முதல்வராக இன்று பதவியேற்கிறார் பூபேந்திர படேல்

x

குஜராத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பூபேந்திர சிங் படேல் பதவியேற்கவுள்ளார்.

குஜராத்தில் 156 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றியை பாஜக பதிவு செய்துள்ள நிலையில், மீண்டும் அம்மாநில முதல்வராக பூபேந்திர சிங் படேல் பொறுப்பேற்கிறார். காந்திநகரில் நடைபெறும் பதவியேற்வு விழாவில் அவருடன் சேர்ந்து 20 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கின்றனர். அவர்களுடன் பாஜக ஆளும் மாநிலத்தை சேர்ந்த முதல்வர்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்