மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூட்டம்

x

மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையை மதிப்பாய்வு செய்தல், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்குதல், நடுநிலைப்படுத்த உரிய திருத்தங்களைச் செய்ய பரிந்துரைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தேசிய நில ஆவணங்கள் கணினி மயமாக்கல் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்