சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் மேற்கொள்கிறார்களா?

x

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, கடந்த மே மாதம்17 ம் தேதி முதல் அனுமதி அளித்து இந்து அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், பக்தர்கள் தொடர்ந்து கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்து வந்த நிலையில், முன்னாள் வங்கி மேலாளர் ஒருவருக்கு கனகசபை மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, கனக சபை தரிசனம் செய்வதில் எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு, அதனை கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்து கடலூர் இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்