உலக்கோப்பைக்கான இந்திய அணிக்கே கேப்டன் - "ஆனால் வீட்டுல டிவி கூட இல்லை" - அஸ்தம் ஓரனின் சோக கதை..!

ஜூனியர் மகளிர் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படும் அஸ்தம் ஓரனின் கிராமத்திற்கு முதல் முறையாக சாலை வசதி செய்து தரப்பட்டு உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் அஸ்தம் ஓரன். இந்நிலையில், இவரது சொந்த கிராமத்துக்கு மாவட்ட நிர்வாகம் சாலை வசதி செய்து தந்துள்ளது. இந்த பணிகளில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அஸ்தம் ஓரனின் பெற்றோரும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, அஸ்தம் ஓரனின் வீட்டிற்கு ஜார்க்கண்ட் அரசு டிவி மற்றும் இன்வெர்ட்டர் வழங்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்