அரசு பள்ளிக்குள் 10th மாணவன் கொலை.. விளையாட்டாய் தொடங்கி கொலையில் முடிந்தது.. Study பீரியடில் சக நண்பர்கள் செய்த பயங்கரம்

x
  • பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், ஜனவரி மாதம் முதலே பள்ளி வளாகத்தில் அங்குமிங்குமாய் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம்....
  • அவ்வாறு அமர்ந்திருக்கும் போது சக மாணவர்கள் பேப்பரை எரிந்தும், கல்லை வீசியும் விளையாட்டாய் ஆரம்பித்த செயல் ஒரு உயிரை பறிக்கும் அளவிற்கு வினையில் முடிந்த துயரச் சம்பவம் திருச்சி அருகே அரங்கேறியுள்ளது....
  • திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தவர் மவுலீஸ்வரன்.
  • இன்னும் சில நாள்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பமாக உள்ள நிலையில், பள்ளி வளாகத்தின் உள்ள மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர்.
  • அப்போது, சக மாணவர்கள் சிறு சிறு கற்களை வீசி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மூன்று மாணவர்கள் தங்கள் மீது கல்லை எரிந்ததாக கூறி மவுலீஸ்வரனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
  • இதில், படுகாயமடைந்த மவுலீஸ்வரன் மயக்கமடைந்து விழுந்ததை கண்ட ஆசிரியர்கள், ஆம்புலன்ஸை வரவழைத்து தொட்டியம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
  • அங்கு மாணவனின் உடல்நிலை மோசமான நிலையில், மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
  • அங்கு மவுலீஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் அறிந்த மவுலீஸ்வரனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இதையடுத்து, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவர் மவுலீஸ்வரனை தாக்கிய மூன்று மாணவர்களை கைது செய்து திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
  • இதனிடையே தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார், பள்ளியில் சம்பவத்தன்று கவனக்குறைவாக இருந்த தலைமையாசிரியை ஈஸ்வரி மற்றும் வகுப்பு ஆசிரியர்களான ராஜேந்திரன், வனிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்