வாலிபர்களை அடிமையாக்கி ஆன்மீக ஆராய்ச்சி செய்யும் பெண் சாமியார்.. தட்டிக்கேட்ட பாமக நிர்வாகி, போலீசுக்கும் பூஜை.. பல வீடியோக்களும்.. பகீர் தகவல்களும்

x
  • தழைய தழைய பட்டுடுத்தி, நெற்றியில் குங்குமம், கன்னத்தில் சந்தனம்,கொண்டையில் பூ ,கையிலே சூலாயுதம் என ஆரவாரத்துடன் ஆடி வரும் இவர் தான் டிக்டாக் சாமியார் கீதா.
  • தன்னை தானே அம்மன் என்று சொல்லிக்கொள்ளும் இவர் பரவச நிலைக்கு சென்ற காட்சி தான் இது.
  • அம்மனிக்கு பக்தர்கள் பாத பூஜை செய்தால், பதிலுக்கு இவர் முத்த மழையே பொழிந்துவிடுவாராம்.
  • அருள்வாக்கு கேட்டு கீதாவை நாடி வரும் பக்தர்களை கட்டியணைத்து, கன்னத்தோடு கன்னம் உரசி, முத்தத்தில் மூழ்கடித்து தனது ஆன்மீக ஆராய்ச்சிக்கு அடிபணிய வைப்பது வழக்கம்.
  • சாமியாரின் இந்த சகலகலா லீலைகளை பார்த்த ஒரு உப்புமா கம்பெனி அவருக்கு ஆன்மீக செம்மல் என்கிற விருதையும் வழங்கி உள்ளது.
  • இப்படி பல சாதனைகளுக்கு சொந்தகாரரான பெண் சாமியார் சில நாட்களுக்கு முன்பு தன்னை பற்றி ஊடகங்கள் தவறான கருத்துகளை பதிவிட்டதாக கூறி கருவறையில் இருந்து ஆபாச அர்ச்சனை செய்தார்.
  • இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசியதன் விளைவாக தான் தற்போது முத்த சாமியார் கீதா சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். என்ன நடந்தது...?
  • கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் ஓமலுாரில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற பார்த்திபன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ந்து போன குடும்பத்தினரை பார்த்திபனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
  • அன்று முதல் இரண்டு மாதமாக பல இடங்களில் தேடி வந்த நிலையில், பார்த்திபன் யூடியூப்பில் பேசும் ஒரு வீடியோ குடும்பத்தினரின் கண்ணில் பட்டிருக்கிறது.
  • உடனே அந்த வீடியோவில் உள்ள தகவல்களை வைத்து பார்த்திபனின் குடும்பத்தினர் போச்சமள்ளியில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு விரைந்திருக்கிறார்கள்.
  • அந்த ஆசிரமத்தை நடத்தி வருவது வேறு யாருமல்ல... முத்த சாமியார் கீதா தான்.
  • திருவண்ணாமலையை சேர்ந்த கீதா, கிருஷ்ணகிரி அடுத்த போச்சமள்ளியில் ஏக்கர் கணக்கில் இடத்தை ஆக்கிரமித்து, காட்டாகரம் ஓம் சக்தி அம்மன் கோவில் என்ற ஒரு ஆலயத்தை கட்டி அருள்வாக்கு கூறி வருவதாக சொல்லப்படுகிறது.
  • அந்த ஆசிரமத்தில் அம்மணிக்கு பணிவிடை செய்வது, அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்துவது என கீதாவுக்கு அடிமையாகவே வாழ்ந்து வந்துள்ளார் பார்த்திபன்.
  • இதனை கண்டு கொதித்து போன பார்த்திபனின் குடும்பத்தினர், மகனை தன்னுடன் அனுப்பும் படி கீதாவிடம் கேட்டிருக்கிறார்கள்.ஆனால் கீதாவோ அதற்கு மறுப்பு தெரிவித்து பார்த்திபனின் பெற்றோரை ஆசிரமத்தில் இருந்து விரட்டி அடித்திருக்கிறார்.
  • உடனே பார்த்திபனின் தந்தை போச்சமள்ளி காவல் நிலையத்தில் மகனை மீட்டு தரும்படி புகார் அளித்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார் பேச்சு வார்த்தை நடத்தி பார்த்திபனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
  • அப்போது பார்த்திபனின் பெற்றோருக்கு பரிந்து பேச வந்த பாமக பிரமுகர் பூபாலனை காவல் நிலையத்தின் வாசலில் வைத்து, தில்லாலங்கடி சாமியார் கன்னத்தில் அரைந்திருக்கிறார்.
  • இதனை தடுக்க வந்த காவல் உதவி ஆய்வாளரின் மீது , பெண் சாமியார் கீதாவின் சீடன் வேல்முருகன் காக்கி சட்டையை பிடித்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்.
  • போலீஸ் மீதே கை வைத்த சீடர் வேல்முருகனையும், முத்தசாமியார் கீதாவையும் போலிசார் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த ஜீப்பில் ஏற்றி இருக்கிறார்கள்.
  • அப்போது அங்கு தனது படையுடன் வந்த இந்து மக்கள் கட்சி தெய்வீக பேரவை மாநில செயலாளர் அசோக் ஜீ போலீஸ் ஜீப்பை எடுக்கவிடாமல் அடாவடி செய்திருக்கிறார்.
  • ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த போலிசார்,அசோக் ஜீயை அடக்கி விட்டு, போலி சாமியார் கீதாவையும், அவரின் சீடர் வேல்முருகனையும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்