Ramayana Movie| உலகளவில் கவனம் பெற்ற `ராமாயணா’ - Pre புக்கிங்கிலேயே செய்த சம்பவம்
#ramayanamovie #ramayanaprebookingsale
ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படமான 'ராமாயணா' படத்தின் அட்வான்ஸ் புக்கிங் 5 கோடி ரூபாயை கடந்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணா திரைப்படம், நவம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கியது... நாடு முழுவதும் 85,000-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டு சுமார் 4.88 கோடி ரூபாய் வசூலை 'ராமாயணா' படம் குவித்துள்ளது. குறிப்பாக, மும்பை ஐமேக்ஸ் திரையரங்குகளில் ரிக்லைனர் சீட் டிக்கெட் ஒன்றின் விலை 2,770 ரூபாய் வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, படம் வெளியாவதற்கு முன்பே மேற்கு வங்கத்தில் 'ராமாயணா' திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
