அஜித் சார் மிகவும் ஊக்கமளிக்கும் நபர் - ரெஜினா
அஜித் சார் மிகவும் ஊக்கமளிக்கும் நபர் - ரெஜினா
அஜித்துடன் நடித்த 'விடாமுயற்சி' படத்தின் சுவாரஸ்யமான படப்பிடிப்பு அனுபவத்தை பகிர்ந்துள்ளார், நடிகை ரெஜினா....
அஜித் , அவருடன் பணியாற்றும் கலைஞர்களிடம் மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் நடந்து கொள்வார் என்றும், குறிப்பாக பெண்களிடம் மரியாதையுடன் பழகுவது தனக்கு நல்ல உணர்வை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அஜித், சக நடிகர்களிடம் தானாகவே வந்து பேசுவார், இது சாதாரண விஷயம் இல்லை என்றும் ரெஜினா பாராட்டினார்.
மேலும், அஜித்துடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் சிறப்பான அனுபவம் என்றும் மனம் திறந்து கூறினார், நடிகை ரெஜினா...
