Uttar Pradesh | டெலிகிராம் ஆர்டர்.. வீட்டுக்கே டெலிவரி.. ரூ.55 லட்சம் கஞ்சா பறிமுதல் #uttarpradesh #telegram #crimenews #police உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், ஆன்லைன் பார்சல் மூலம் கஞ்சா விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து, 55 கிலோ 124 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 55 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. ஒடிசாவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவைக் கடத்தி வந்த கும்பல், டெலிகிராம் செயலி மூலம் ஆர்டர்களைப் பெற்று, முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களின் கவர்களில் கஞ்சாவைப் பொட்டலமிட்டு, உள்ளூர் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து கார் மற்றும் 3 செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்