#tvk #tnbyelection #cmvijay மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொகுதி முழுவதும் உள்ள 285 பூத்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பூத் வாரியாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களுக்கு தலா 5 பூத்களும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா 3 முதல் 4 பூத்களும், மாவட்டச் செயலாளர்களுக்கு தலா 2 பூத்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து சம்பந்தப்பட்ட பூத்களில் முழுமையான களப்பணியைத் தொடங்குமாறு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்