#tirupparankundramdeepam #tngovt #tirupparankundramdeepamcaseupdate திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்தால், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சர்வே கல் தூண்களும் மதச் சின்னங்களாக மாற்றப்படும் கோரிக்கைகள் எழும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது... திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் அரவிந்த் குமார், வி.எம். பஞ்சோலி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது... இதற்கிடையே, உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு தர்கா நிர்வாகத்திற்கு போதிய வாய்ப்பு வழங்கவில்லை என தர்கா தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், புதிய இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி கோரும் விவகாரத்தை பொதுநல வழக்காக அல்லாமல் உரிமையியல் வழக்காகவே அணுக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது... இருதரப்பு வாதங்களும் தொடர்ந்து நடைபெறும் நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது...