சமீபத்திய செய்திகள்

Tirupparankundram Case Update| திருப்பரங்குன்றம் தீப வழக்கில் பூசாரி வைத்த ட்விஸ்ட்

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் பூசாரி வைத்த ட்விஸ்ட்

thanthitv

``சைவத்தில் சிவன் மட்டுமே ஒரே கடவுள்.. 2 கடவுள்களை கொண்டு வருவதை ஏற்க முடியாது’’ - தி.குன்றம் தீப வழக்கில் பூசாரி வைத்த ட்விஸ்ட் #tirupparankundramdeepamcase #tirupparankundramcaseupdate திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பான மனு விசாரணையில், சமணக் குகைகள், காசி விஸ்வநாதர் கோயில், தர்கா மற்றும் அடிவாரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் என திருப்பரங்குன்றம் ஒரு மதச்சார்பற்ற குன்று என பூசாரி அரங்கநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக திருப்பரங்குன்றம் உள்ளது எனவும், இம்மலையில், 1862 மற்றும் 1912-ஆம் ஆண்டுகளிலேயே உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரியபோது, அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு நீதிமன்றங்கள் நிராகரித்ததை பூசாரி அரங்கநாதன் தரப்பு சுட்டிக்காட்டியது. சைவத்தின் கருத்து படி சிவன் தான் ஒரே கடவுள். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மலையிலும் ஒரே ஒரு விளக்குதான் ஏற்றப்படுகிறது எனவும் பூசாரி அரங்கநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தற்போது சைவக் கருத்தில் இரண்டு கடவுள்களைக் கொண்டு வர விரும்புகிறார்கள். அது முடியாது எனவும் பூசாரி அரங்கநாதன் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், சைவ ஆகமம் மற்றும் பகவத் கீதையைப் படித்துப் பாருங்கள் எனத் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய தீபத்தூண் சாதாரண நில அளவைக் கல் அல்ல என்றும், மகா கார்த்திகை தீப நாளன்று செப்புக் கொப்பரை அல்லது சிறிய வாளி வைத்து நெய் தீபம் ஏற்றுவதற்காகவே தீபத்தூண் உச்சியில் பள்ளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ராம ரவிக்குமார் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

CM Vijay | Chennai | சென்னையின் முக்கிய ஸ்பாட்டில் CM விஜய் -முதல்வரை பார்த்ததும் ஆர்ப்பரித்த மக்கள்

CM Vijay | VS Babu | VSபாபு உடலை பார்த்தபடி; பாக்ஸ் மீது தலை வைத்த படி நின்ற CM விஜய்

Vanni Arasu || வி.எஸ்.பாபு மறைவு - அமைச்சர் வன்னிஅரசு உருக்கமாக சொன்ன வார்த்தை

VS Babu RIP | வாடிய முகத்துடன் ஓடி வரும் அமைச்சர்கள்.. நேரம் ஆக ஆக வந்துகொண்டே இருக்கும் தொண்டர்கள்

VS Babu RIP | வீட்டிற்கு வந்த வி.எஸ்.பாபு உடல் -கலங்கி வந்த அமைச்சர் .. கதறி கதறி அழுத உறவினர்கள்