சமீபத்திய செய்திகள்

Thanjavur | TN Police | சாலையோர தீபாவளி வியாபாரிகளிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்- 3 பேர் கைது

சாலையோர தீபாவளி வியாபாரிகளிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்- 3 பேர் கைது

thanthitv

Thanjavur | TN Police | சாலையோர தீபாவளி வியாபாரிகளிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்- 3 பேர் கைது #Thanjavur #TNPolice தஞ்சையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். காந்திஜி சாலை, கலைஞர் சிலை அருகே கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளிடம் சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பொதுமக்கள் அவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த சுகுமார், ஆனந்தன், சுகுமார் ஆகிய மூவர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

NeoMax Scam | ED | நியோமேக்ஸ் மோசடி - ரூ.238 கோடி சொத்துகள் ஒப்படைப்பு

CM Vijay | TVK | "கன்னத்துல ஒரு முத்தம்" கேட்ட குடும்பத்தார் - ஷாக்காகி CM விஜய் கொடுத்த லுக்

Prisoners escape | Chennai Police | கைதிகள் தப்பிய விவகாரம் - அதிரடியாக வந்த உத்தரவு

Diwali | Train | Indian Railways | நெருங்கும் தீபாவளி.. 20 விரைவு ரயில்களில் முக்கிய மாற்றம்..

CM Vijay | TVK Education Awards | மேடையிலேயே மாணவன் சொன்ன சொல்.. கடைசியில்இறுகப்பற்றிய CM விஜய்