Tenkasi | TN Police | 30 பவுன் நகை.. போலீசில் ஒப்படைத்த முதியவர்.. போலீசில் ஒப்படைத்த முதியவர் #Tenkasi #TNPolice #Gold பாவூர்சத்திரம் அருகே கேட்பாரற்று கிடந்த 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுமார் 30 பவுன் தங்க நகையை மீட்ட முதியவர் ஒருவர், காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... அடுத்த ஆரியங்காவூர் ரயில்வே கேட் அருகே தவறவிட்டு சென்ற ரூபாய் 35 லட்சம் மதிப்பிலான 245 கிராம் தங்க நகைகள் ரூபாய் 5000 பணத்தை எடுத்து முதியவர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் போலீசார் முதியவரை சால்வை அணிவித்து பாராட்டினர். தென்காசி மாவட்டம், அரியப்பபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். 68 வயதான இவர் தனது இருசக்கர வாகனத்தில் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள ஆரியங்காவூர் ரயில்வே கேட் வழியாக சென்றபோது, தனது பையை தவறவிட்டுள்ளார். அந்தப் பையில் சுமார் 245 கிராம் தங்க நகைகள் மற்றும் 5,000 ரூபாய் ரொக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், அவ்வழியாகச் சென்ற அருகில் இருந்த மற்றொரு கிராமமான மேட்டூரைச் சேர்ந்த 76 வயதான பாப்பையா என்பவர் அந்தப் பையை எடுத்துப் பார்த்தபோது, அதில் தங்க நகைகள் மற்றும் பணம் இருப்பதைக் கண்டார். இதையடுத்து, எவ்வித சுயநலமும் இன்றி அவற்றைப் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து, பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்தி, பையைத் தவறவிட்ட சுப்பிரமணியனைக் கண்டறிந்து, அவரிடம் 245 கிராம் தங்க நகைகள் மற்றும் 5,000 ரூபாய் பணம் ஒப்படைக்கப்பட்டது. கேட்பாரற்று கிடந்த தங்க நகை மற்றும் பணத்தை உரியவரிடம் சேர்க்க உதவிய 76 வயது முதியவர் பாப்பையாவின் நேர்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை காவல்துறையினரும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.