சமீபத்திய செய்திகள்

Tanker | Viral Video | கவிழ்ந்த பால் டேங்கர்.. "அள்ளுடா அள்ளு.." போட்டி போட்டு பிடித்து சென்ற மக்கள்

கவிழ்ந்த பால் டேங்கர்.. "அள்ளுடா அள்ளு.." போட்டி போட்டு பிடித்து சென்ற மக்கள்

thanthitv

Milk Tanker | Viral Video | கவிழ்ந்த பால் டேங்கர்.. "அள்ளுடா அள்ளு.." போட்டி போட்டு பிடித்து சென்ற மக்கள் #MilkTanker #ViralVideo #Maharashtra மகாராஷ்டிராவில் சாலை விபத்தில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து, பாலை பொதுமக்கள் போட்டி போட்டி அள்ளிச் சென்றனர். மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில், மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் அமுல் நிறுவனத்தின் பால் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. குஜராத்திலிருந்து விரார் நோக்கிச் சென்ற இந்த லாரி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தின் காரணமாக டேங்கரில் இருந்த நூற்றுக்கணக்கான லிட்டர் பால் சாலையில் ஆறு போலக் கொட்டி வீணானது. இதனைப் பார்த்த அப்பகுதி கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வாளிகள், பாட்டில்கள் மற்றும் கேன்களுடன் திரண்டு வந்து, போட்டி போட்டுக்கொண்டு பாலைப் பிடித்துச் சென்றனர். இதனால் மும்பை செல்லும் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த நெடுஞ்சாலைப் காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, கவிழ்ந்த லாரியை அகற்றி போக்குவரத்தைச் சீரமைத்தனர்.

CM Vijay | Kamalini | அறிவித்தார் CM விஜய்

CM Vijay Madurai Visit CM விஜய் வருகை - பரபரக்கும் மதுரை

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி வழக்கு - கஸ்டடியில் எடுக்கப்பட்ட முக்கிய புள்ளி

DMK vs TVK | அனைவரும் பேசி கொண்டிருக்கும் போதே திடீர் அதிர்ச்சி கொடுத்த திமுக

Cooum plan``கூவம் நதி’’ - CM விஜய் சிந்தனையில் முக்கிய விஷயம்