சமீபத்திய செய்திகள்

Sivagangai Murder| மீண்டும் சிவந்த `சிவகங்கை’ - சுத்து போட்டு கோரமாக வெட்டி படுகொலை

Sivagangai Murder| மீண்டும் சிவந்த `சிவகங்கை’ - சுத்து போட்டு கோரமாக வெட்டி படுகொலை

thanthitv

#sivagangaimurder #sivagangailatestnews ​பழைய கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த இளைஞரை மர்ம நபர்கள் நள்ளிரவில் சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேலூர் முருகபாஞ்சான் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். 23 வயதே ஆன இவர் ஏற்கனவே நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு விக்னேஷ் தனது நண்பரான முனீஸ் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் திடீரென இருவரையும் சரமாரியாக வெட்டி தள்ளினர். ​இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த விக்னேஷ் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய முனீஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஆதிநாராயணன், குணா, தங்கமணி, சரண் என்ற முனீஸ்வரன் மற்றும் மணி ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளியான நல்லுசாமி போலீசார் தேடி வருகின்றனர்.

Anbil Mahesh | அன்பிலுக்கு ஷாக்.. கோர்ட் அதிரடி உத்தரவு

Kovai Periyar Arivulagam | DVAC | பெரியார் அறிவுலக விவகாரம்..இறங்கிய DVAC

Gingee Girl Missing Case Update| செஞ்சி சிறுமி வழக்கில் முக்கிய அப்டேட்

JCD Prabhakar | TVK | AIADMK | அதிமுக EX MLAகள் விவகாரம்.. இறுதி முடிவு.. நாள் குறித்த சபாநாயகர்

Rajmohan |TVK MLA|"தவறு செய்தால் தவெக எம்எல்ஏவாக இருந்தாலும் விட மாட்டோம்"அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி