தோனி குறித்து அன்றே சரியாக கணித்த சச்சின்.. சச்சின்கிட்ட இருந்து இந்தியாவே எதிர்பார்க்காத `ரகசியம்’ #sachinaboutdhoni #dhoniretirement #cskdhoni தோனியுடனான தனது பயணம் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள தோனியுடனான தனது பயணம் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்... வங்கதேசத்தில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்வதைப் பார்த்துவிட்டு, அவரது அதிரடி ஆட்டத்தில் ஏதோ ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது என்று சௌரவிடம் சொன்னது எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது.... தோனியிடம் ஒரு அபூர்வமான திறமை இருப்பதை அப்போது பார்க்க முடிந்தது.... அதன் பிறகு எத்தகையதொரு அற்புதமான பயணத்தை தோனி மேற்கொண்டார்... தோனியுடன் டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்டதும், இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியமான மற்றும் மறக்க முடியாத தருணங்களில் தோனியுடன் இணைந்திருந்ததும் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி... தோனி ஏதோ ஒரு சிறப்பான சாதனையைச் செய்வார் என்று நான் எப்போதும் நம்பினேன், ஆனால், அதையும் தாண்டி தோனி எவ்வளவோ சாதித்துவிட்டார்... இந்திய கிரிக்கெட்டிற்கு தோனி தன்னால் முடிந்த மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்... தோனியுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டது மிகவும் அற்புதமான அனுபவம்.... *சிறப்பாக விளையாடினீர்கள், எம்.எஸ்...* என சச்சின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்...