சமீபத்திய செய்திகள்

Russia | America| ``ரஷ்யாவில் தீவிரவாத சதி’’ - புதினுக்கு அமெரிக்காவின் குலைநடுக்க எச்சரிக்கை

``ரஷ்யாவில் தீவிரவாத சதி’’ - புதினுக்கு அமெரிக்காவின் குலைநடுக்க எச்சரிக்கை

thanthitv

#putin #russiavsamerica ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள பிரபல அருங்காட்சியகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்கா அளித்த ரகசியத் தகவலையடுத்து, ரஷ்ய பாதுகாப்புப் படையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள 'சாரிட்சினோ அருங்காட்சியகம் மற்றும் பூங்கா' (Tsaritsyno) வளாகத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவிலான பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க தூதரகம் எச்சரித்தது. இந்த தகவலை ரஷ்ய கூட்டமைப்பு பாதுகாப்பு சேவையான எஃப்.எஸ்.பி (FSB) உறுதிசெய்து, தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கியது. 2024 மார்ச் மாதத்திலும் அமெரிக்க தூதரகம் இதேபோல எச்சரித்த சில நாட்களிலேயே, மாஸ்கோவின் குரோகஸ் சிட்டி ஹால் (Crocus City Hall) அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

Chennai to Puducherry Boat Service | சென்னை - புதுவை இடையே படகு சேவை - வேலையை ஆரம்பித்தது தமிழக அரசு

Puzhal Jail Escape | TV சத்தத்தை வைத்து `ரூட்’ போட்டு தப்பித்தது புழலில் இருந்து தப்பியது அம்பலம்

Murusu Cyclone | சென்னையில் இருந்து சொல்லிக்கொள்ளும் தூரத்தில் `முரசு' புயல் - அதிகனமழைக்கு வாய்ப்பு

TN Govt| TN New Secretariat| `இடிக்க’ தமிழக அரசு முடிவு

Rain Alert | சற்றுமுன் வெளியான அறிவிப்பு - சென்னை உள்ளிட்ட 14 மாவட்டத்துக்கு அலர்ட்