சமீபத்திய செய்திகள்

Rahul | BJP | "பாஜகவுக்கு அடிபணிந்தது.." - கட்சி பெயரை சொல்லி கடுமையாக தாக்கிய ராகுல்

"பாஜகவுக்கு அடிபணிந்தது.." - கட்சி பெயரை சொல்லி கடுமையாக தாக்கிய ராகுல்

thanthitv

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசம்-பாஜக மீது சாடல் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தின் கலாச்சாரத்தைப் பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது பேசிய அவர், ஒரு காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய அதிமுக, தற்போது ஊழல் புகார்களால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு அடிபணிந்து ஒரு வெற்றுக்கூடாக மாறிவிட்டதாகக் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தின் மொழி மற்றும் பண்பாட்டை நேரடியாகத் தாக்க முடியாத பாஜக, அதிமுகவை ஒரு முகமூடியாகப் பயன்படுத்தி தமிழகத்திற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மத்திய அரசின் 'ஒரே தேசம் ஒரே மொழி' கொள்கை மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க நடக்கும் சதியை முறியடிப்போம் என்றார். காமராஜர் அமைத்த வளர்ச்சிப் பாதையையும், திமுக அரசின் காலை உணவுத் திட்டம் போன்ற சமூக நீதித் திட்டங்களையும் பாஜக வெறுப்பதாகச் சாடினார். மேலும் தமிழினத்தின் வரலாற்றைக் காக்க உங்கள் சகோதரனாக என்றும் துணை நிற்பேன் என உருக்கமாகப் பேசினார்.

Sathyaraj | சிபிராஜ் Dress குறித்த கேள்வி.. கிண்டலாக பதில் சொன்ன தந்தை சத்யராஜ்..!

TN Election 2026 | "இப்ப நான் வந்தேன்" - காரசாரமாக பேசிய T.ராஜேந்தர்

🔴LIVE : AssemblyElection2026 | 3 கோடியை தாண்டிய வாக்குகள் தமிழகத்தில் பெரிய சர்ப்ரைஸ்

TN Election "எல்லாரும் முன் வந்து ஓட்டு போடுறாங்க.." வாக்களித்த பின் நெகிழ்ச்சியாக சொன்ன பரத்

TN Election 2026 | குவியும் ஓட்டுகள்.. இளம் வாக்காளர்கள் சொன்ன கருத்து