சமீபத்திய செய்திகள்

Prison | Police| கைதியை அழைத்து சென்ற போலீஸ் வாகனம்.. வீட்டை உடைத்து நுழைந்ததால் அதிர்ச்சி

Prison | Police| கைதியை அழைத்து சென்ற போலீஸ் வாகனம்.. வீட்டை உடைத்து நுழைந்ததால் அதிர்ச்சி

thanthitv

#prison #pudukottainews #police புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை அருகே ஆயுள் தண்டனை கைதியை சிறைக்கு அழைத்துச் சென்ற காவல் வாகனம் விபத்துக்குள்ளானது. திருச்சி மத்திய சிறை கைதியான 45 வயது புரோஸ்கான், தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோலில் சென்றுவிட்டு மீண்டும் சிறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அறந்தாங்கி - புதுக்கோட்டை சாலையில் முத்துப்பட்டினம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த காவல் வாகனம், சாலையோர மளிகைக் கடை மற்றும் வீட்டின் சுவரில் மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் ஜெகதீசன், சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், காவலர்கள் சிவசங்கர பாண்டி, பொன்வளவன் மற்றும் கைதி புரோஸ்கான் ஆகிய ஐந்து பேரும் லேசான காயமடைந்தனர். அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gingee Child Issue | செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி.. நடுக்கத்தில் மக்கள்

TN அரசு அக்கவுண்ட்-லேயே கைவைத்த கும்பல்..பல கோடிகள் அபேஸ்; பெரும் ஷாக்கில் சைபர் கிரைம் போலீஸ்

Today Gold Price| மறுபடியும் ஏறி ஏறி ஷாக் கொடுத்த தங்கம் இன்று குறைந்தது

Chennai | TN Buses | இத்தனை ஆயிரம் பஸ்களா..?! மாறிய பிளான்.. வெளியான Detailed தகவல்

ADMK | TVK| அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த 4 பேரிடம் விசாரணை