#ooty #treefall உதகையிலிருந்து மஞ்சூர் செல்லும் நெடுஞ்சாலையில் காந்திபேட்டை பகுதியில் இன்று காலை சாலையோரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பரபரப்பு ஏற்பட்டது. மரம் அருகில் இருந்த வீட்டின் மீதும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும் விழுந்ததால் வீடு மற்றும் கார் சேதமடைந்தன. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மரத்தை அகற்ற முயன்றனர். அப்போது, ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற பல மாதங்களாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது