Ooty | நீர் பனி போர்வையில் நனையும் உதகை, கொடைக்கானல்.. முத்து மணிகளை ஒட்ட வைத்தது போல அழகிய காட்சி #snow #ooty #kodaikanal #thanthitv தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.... உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக நீர்பனி பொழிவு காணப்படுகிறது. எல்க்ஹில், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் புற்கள் மற்றும் மலர்கள் மீது முத்து மணிகளைப் போல் பனித்துளிகள் படர்ந்து காணப்பட்டன. கொடைக்கானலில் பனி சீசன் தொடங்கியுள்ளதால், பல்வேறு பகுதிகளில் நீர்பனி பொழிவு காணப்படுகிறது. ஜிம்கானா, கீழ்பூமி உள்ளிட்ட பகுதிகளில் பசுமையான புல்வெளிகள் மற்றும் செடி, கொடிகள் மீது முத்துக்களைப் போல் பனித்துளிகள் படர்ந்து ரம்மியமாகக் காட்சியளிக்கின்றன. இதேபோல், அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரியலூர், திருமானூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணியைத் தாண்டியும் பனிமூட்டம் நீடித்தது. வழக்கமாக மார்கழி, தை மாதங்களில் காணப்படும் பனிப்பொழிவு, இந்த ஆண்டு ஐப்பசி மாதத்திலேயே தொடங்கியுள்ளது...