சமீபத்திய செய்திகள்

Ducks| தாக்கிய மர்ம நோய்.. கொத்து கொத்தாக மடிந்த 800 உயிர்கள் - லேப் டெஸ்ட்டுக்கு சென்ற சாம்பிள்

Ducks| தாக்கிய மர்ம நோய்.. கொத்து கொத்தாக மடிந்த 800 உயிர்கள் - லேப் டெஸ்ட்டுக்கு சென்ற சாம்பிள்

thanthitv

தாக்கிய மர்ம நோய்.. கொத்து கொத்தாக மடிந்த 800 உயிர்கள் - என்ன நடக்கிறது.. லேப் டெஸ்ட்டுக்கு சென்ற சாம்பிள் #ducks #birdfever திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மர்ம நோயால் சுமார் 800 வாத்துகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த வடதில்லை பகுதியில் வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான வாத்துகள், கடந்த ஒரு மாதமாக மர்ம நோயால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றன. இதுவரை சுமார் 800 வாத்துகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வாத்துகள் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்ததா என்பதைக் கண்டறிய, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையக் குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், உயிரிழந்த வாத்துகளின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். ஆய்வு முடிவுகள் வெளியான பின்னரே வாத்துகள் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"அட ஆமாங்க சீனாவும் நாங்களும் மாத்தி மாத்தி.." முகம் எதிரே சொன்ன டிரம்ப்..தர்ம சங்கடமான ஜி ஜின்பிங்

Chennai சர்வ சாதாரணமாக எடுத்து செல்லப்பட்ட ரூ.140 கோடி பெறுமானம் - சென்னையில் அதிர்ச்சி

கரூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை - கடிதம் கண்டெடுப்பு

ATM Theft நள்ளிரவில் கும்மிடிபூண்டி ATMஐ உலுக்கிய கொள்ளையன் - ஒருவரை பிடித்து துருவும் போலீஸ்

Child | 3 வயது பிஞ்சின் கைகளை கட்டி போட்டு மிருகம் போல் தாக்கிய பெண் - அதிரடியாக தூக்கிய போலீஸ்