சமீபத்திய செய்திகள்

MK Stalin| VS Babu| ஸ்டாலினுக்காக VS பாபு செய்த அந்த செயல்.. இனி வரலாற்றுல நின்னு பேசும்

MK Stalin| VS Babu| ஸ்டாலினுக்காக VS பாபு செய்த அந்த செயல்.. இனி வரலாற்றுல நின்னு பேசும்

thanthitv

#mkstalin #vsbabu #ripvsbabu #vsbabudeathreason சென்னை கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியலில் அவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்... அரசியல் களத்தில் வெற்றிகளும் தோல்விகளும் சகஜம்தான்... ஆனால் சில வெற்றிகள் மட்டுமே வரலாற்றில் தடம் பதிக்கும்... அப்படியொரு வெற்றியைப் பதிவு செய்தவர் தான் வி.எஸ்.பாபு... 1951ல் பிறந்த வி.எஸ்.பாபு...வடசென்னை அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி வந்தவர்...புரசை பாபு என்று மக்கள் மத்தியில் பிரபலமானவர்... திமுகவில் தொடங்கிய வி.எஸ்.பாபுவின் அரசியல் பயணம்...அதிமுகவில் தொடர்ந்து...இறுதியாக தவெகவில் நிறைவடைந்துள்ளது... திமுகவின் வட சென்னை மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்த இவர் 2006 சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்று முதன்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்... தொடர்ந்து 2011 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்டபோது... அவரது தேர்தல் பணிகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டவர்... 2011 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இணைந்தார் வி.எஸ்.பாபு... அதன்பிறகு அதிமுகவில் இருந்து விலகி இறுதியாக...2026 பிப்ரவரி 7ல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்... 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக அரசியலே உற்றுநோக்கிய கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்... 15 ஆண்டுகளாக அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஸ்டாலினை எதிர்த்துக் களம் கண்டார்...தேர்தல் முடிவுகள் வெளியானபோது 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரசியலில் புயலைக் கிளப்பினார் வி.எஸ்.பாபு... காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்ததை ஸ்டாலின் செய்கை வைரலானதைப் போல் செய்து காட்டிய வி.எஸ்.பாபுவின் சைகையும் வைரலானது.. ஆனால், அரசியல் களத்தில் அவர் பெற்ற அந்த வெற்றிக்குப் பிறகு வாழ்க்கை அவருக்கு மற்றொரு கடினமான போராட்டத்தைத் தந்தது... கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி திடீரென வி.எஸ்.பாபுவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.. உடனடியாக அவர் சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்​துறை மருத்​து​வர் குழு​வினர் சிகிச்சை அளித்தனர்.. செப்டம்பர் 23ம் தேதி முதல்​வர் விஜய் மருத்​து​வ​மனைக்கு சென்று வி.எஸ்​.​பாபுவை நேரில் சந்​தித்து நலம் விசா​ரித்​தார்... ஆனால் அதன்பிறகு பல நாட்களாகவே அவரது உடல்நிலை குறித்த எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை... அவர் நலமுடன் உள்ளாரா? இல்லையா? என அவரது ஆதரவாளர்களும் கவலையடைந்த நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது... வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்த தினமே வி.எஸ்.பாபுவின் மறைவு செய்தி வந்து விட்டது... தேர்தல் களத்தில் வெற்றியைப் பதிவு செய்தவர்... சட்டமன்றத்தில் தனது தொகுதி மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்... ஆனால் அந்த கடமையை தொடங்கும் முன்பே அவரது அரசியல் பயணத்திற்கும் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி விழுந்து விட்டது... வி.எஸ். பாபுவின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு

Cyclone Akvan | நிலையை மாற்றிய `அக்வான்’ தீவிர புயல் - வானிலை மையம் முக்கிய தகவல்

DMK | EX. அமைச்சர் மூர்த்தி வீட்டுக்கு வந்த போலீஸ் - ரெய்டால் அதிரும் மதுரை ஐயர் பங்களா

CM Vijay | Chennai | சென்னையின் முக்கிய ஸ்பாட்டில் CM விஜய் -முதல்வரை பார்த்ததும் ஆர்ப்பரித்த மக்கள்

CM Vijay | VS Babu | VSபாபு உடலை பார்த்தபடி; பாக்ஸ் மீது தலை வைத்த படி நின்ற CM விஜய்

Vanni Arasu || வி.எஸ்.பாபு மறைவு - அமைச்சர் வன்னிஅரசு உருக்கமாக சொன்ன வார்த்தை