சமீபத்திய செய்திகள்

MK Stalin | CM Vijay| ``Vice City-ஆக மாறி வரும் தமிழகம்’’ - போட்டு தாக்கிய ஸ்டாலின்

MK Stalin | CM Vijay| ``Vice City-ஆக மாறி வரும் தமிழகம்’’ - போட்டு தாக்கிய ஸ்டாலின்

thanthitv

#mkstalin #cmvijay #vicecity சென்னையில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மாநில காவல்துறை என்ன செய்கிறது என முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மாதம் நாகையில் 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், போதைப்பொருள் கடத்தலை மாநில காவல்துறையால் தடுக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பாலியல் அத்துமீறல்கள், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் லாக்கப் மரணங்களால் த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாடு 'Vice City' ஆக மாறி வருவதாக விமர்சித்துள்ளார் மேலும், போதைப்பொருள் தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ள 65 சிறப்பு அதிரடிப்படைகள் என்ன செய்கின்றன என்றும், முதலமைச்சர் விஜய் உள்துறை தொடர்பான பிரச்சினைகளுக்கு ஏன் பதிலளிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

DMK vs TVK | "கனிமொழி இதற்கு பதில் சொல்ல வேண்டும்" - இறங்கி அடித்த தவெக

Match | Boxing | ஒரே நேரத்தில் 2 இடங்களிலா..? குழப்பம்..

Chennai | Arrest | ICE பெட்டியில் அடுக்கிய ரூ.140 கோடி.. சென்னையில் காரோடு 2 பேரை கைது செய்த போலீஸ்

Vijayabaskar Wife| டைம் கேட்ட விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா

Rain`அக்வான்’ கரையை கடக்கும் இடத்தில் திடீர் மாற்றம் - வேகம் அதிகரித்து ஆவேசமாக நெருங்குகிறது..