சமீபத்திய செய்திகள்

Mettupalayam MLA | புதிய பேருந்து சேவை தொடங்கி வைத்து மக்களுடன் பயணித்த MLA சுனில் ஆனந்த்

புதிய பேருந்து சேவை தொடங்கி வைத்து மக்களுடன் பயணித்த MLA சுனில் ஆனந்த்

thanthitv

Mettupalayam MLA | புதிய பேருந்து சேவை தொடங்கி வைத்து மக்களுடன் பயணித்த MLA சுனில் ஆனந்த் #mettupalayam #TVKMLA #TVKvijay #thanthitv மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போக்குவரத்து வசதியின்றித் தவித்து வந்த கிராம மக்களுக்குப் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புற மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, மூன்று புதிய அரசு பேருந்து சேவைகளைச் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். காரமடை அருகே உள்ள மருதூர் ஊராட்சி செல்லப்பனூர், பள்ளேபாளையம் ஊராட்சி பகத்தூர் மற்றும் காரமடை நகராட்சி எத்தப்பன் நகர் ஆகிய பகுதிகளில் நகரத்துடன் இணைக்கும் பேருந்து வசதி இல்லாததால் மாணவ-மாணவிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, புதிய பேருந்து வழித்தடங்களை உருவாக்கி அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தொடக்க விழாவில் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ சுனில் ஆனந்த், புதிய பேருந்துகள் சேவையை கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், செல்லப்பனூர் மற்றும் எத்தப்பன் நகர் வரை பொதுமக்களுடன் பயணித்த அவர், இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். தங்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதால் அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ சுனில் ஆன்ந்திற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Breaking | Menstural Leave | மாதவிடாய் விடுப்பு வழக்கு | மதுரை பெண்ணை பாராட்டிய கோர்ட்

Krishnagiri | அடித்து தூக்கிய லாரி.. 2 ஆசிரியர்கள், சிறுவன் பரிதாப பலி

CM Vijay | CM விஜய் அறிவிப்பு.. பதக்கம் கொடுத்த ஊக்கத்தொகை

Actor Parthiban | நடிகர் பார்த்திபன் கொடுத்த மனு.. தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு

Supreme Court | தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு