#nellairains #manimutharuriver நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தொடர்ந்து தடை விதித்துள்ளனர். அருவியைப் பார்வையிட மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக, மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 1,053 கன அடியாக அதிகரித்தது. 118 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 70.45 அடியாக உயர்ந்துள்ளது.