#ministerramesh #loyolamani அறநிலையத்துறைக்கு லயோலா மணி கடிதம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை வழங்க வேண்டிய 58 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை விரைந்து வழங்கக் கோரி, பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி கடிதம் அனுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் அமைச்சர் ரமேஷ் இத்தொகை தொடர்பாகப் பேசியிருந்த நிலையில், நிலுவைத் தொகையைப் பெறுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக அறநிலையத்துறைக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.