அடுத்தடுத்து பைக்குகளை அடித்து தூக்கிய பஸ்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி #kovai #coimbatore #accident #cctv #viralvideo #thanthitv கோவை மாவட்டம் சூலூர் நரசிம்மா மில் அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆபத்தான யூ-டர்ன் பகுதியில் வேகத்தடைகள் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.