சமீபத்திய செய்திகள்

Karur| Viral Video| பட்டப்பகலில் இளைஞரை நடுரோட்டில் ஓடவிட்டு.. கரூரில் பயங்கரம்

Karur| Viral Video| பட்டப்பகலில் இளைஞரை நடுரோட்டில் ஓடவிட்டு.. கரூரில் பயங்கரம்

thanthitv

#karurattack #karuryoungester #viralvideo கரூரில் பட்டப்பகலில் இளைஞரை நடுரோட்டில் தாக்கி கடத்த முயற்சி கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், தோழியுடன் பைக்கில் சென்ற இளைஞரை, மர்ம கும்பல் ஒன்று நடுரோட்டில் தாக்கி காரில் கடத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திகிராமம் மைதானம் அருகே புறக்காவல் நிலையம் எதிரில் சென்றபோது, காரில் வந்தவர்கள் இளைஞரை வழிமறித்து, சட்டையைப் பிடித்து தாக்கி காரில் ஏற்ற முயன்றுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வந்த போலீசார், இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பதும், சில நாட்களுக்கு முன்பு காரை கல்லால் தாக்கி சேதப்படுத்தியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இருதரப்பினரின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பட்டப்பகலில் நடந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Chennai சர்வ சாதாரணமாக எடுத்து செல்லப்பட்ட ரூ.140 கோடி பெறுமானம் - சென்னையில் அதிர்ச்சி

கரூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை - கடிதம் கண்டெடுப்பு

ATM Theft நள்ளிரவில் கும்மிடிபூண்டி ATMஐ உலுக்கிய கொள்ளையன் - ஒருவரை பிடித்து துருவும் போலீஸ்

Child | 3 வயது பிஞ்சின் கைகளை கட்டி போட்டு மிருகம் போல் தாக்கிய பெண் - அதிரடியாக தூக்கிய போலீஸ்

China ``வாயா புதின்..’’ தோளில் பாசமாக தட்டி அருகே நிற்க வைத்த டிரம்ப் - உலகே இதுவரை பார்க்காத காட்சி