சமீபத்திய செய்திகள்

Kallakurichi Issue| கள்ளக்குறிச்சியில் இன்னொரு `அரசியல்’ அதிர்ச்சி

Kallakurichi Issue| கள்ளக்குறிச்சியில் இன்னொரு `அரசியல்’ அதிர்ச்சி

thanthitv

#kallakurichiissue #kallakurichidmkissue கள்ளக்குறிச்சி அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணுடன் உறவில் ஈடுபட்டு பணம் பறித்து ஏமாற்றியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, திமுக மாவட்ட இளைஞரணி நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரியும் இளம்பெண்ணுக்கு, சங்கராபுரத்தைச் சேர்ந்த ஹஷத்பாஷா என்கிற ஆஷிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அப்பெண்ணுடன் உறவில் ஈடுபட்ட ஹஷத்பாஷா, தனது தேவைகளுக்காக அப்பெண்ணிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தையும் பெற்றுள்ளார். பின்னர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதுடன், தான் திமுகவைச் சேர்ந்தவர் என்றும், அமைச்சரின் உதவியாளர் மற்றும் எம்.எல்.ஏக்களை தனக்குத் தெரியும் என்றும் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஹஷத்பாஷா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tanishq Robbery| Nishant | நிஷாந்த் பரபரப்பு வாக்குமூலம்.. மீனாட்சியின் தாயாரை நோக்கி போலீஸ்..

MLA VS Babu Death | "சாகசக்காரர்" - MLA V.S.பாபு உடலை பார்த்ததும் அசையாமல் நின்ற அமைச்சர் ராஜ்மோகன்

Cauvery Issue| காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக வந்த முக்கிய தீர்ப்பு

DMK | Moorthy | "இதுல உண்மையே இல்ல.. இதுக்கும் நாங்க போவோம்" - Ex.Min.மூர்த்தி சொன்ன விசயம்

Raid | MK Stalin | DMK | கண் சிவந்த ஸ்டாலின் - கொதிக்கும் அரசியல் களம்