Insta Story | வைரலான அந்த ஒரு இன்ஸ்டா ஸ்டோரி.. தேடி சென்று கைது செய்த போலீஸ் #thoothukudi #instastory #thanthitv தூத்துக்குடி அருகே அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை அருகே தெய்வசெயல்புரம் பகுதியைச் சேர்ந்த நல்லபெருமாள் என்பவர், அரிவாளுடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் அவரைக் கைது செய்தனர். இதையடுத்து, தனது தவறை உணர்ந்து இனிமேல் இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட மாட்டேன் எனக் கூறி மன்னிப்பு கோரியுள்ளார். அவரது மன்னிப்பு வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.