சமீபத்திய செய்திகள்

Illegal Affair| காதலனை ஜெயிலுக்கு அனுப்பி.. பின் தானே வெளியே எடுத்த 40 வயது காதலிக்கு நேர்ந்த சோகம்

Illegal Affair| காதலனை ஜெயிலுக்கு அனுப்பி.. பின் தானே வெளியே எடுத்த 40 வயது காதலிக்கு நேர்ந்த சோகம்

thanthitv

காதலனை ஜெயிலுக்கு அனுப்பி.. பின் தானே வெளியே எடுத்த 40 வயது காதலி.. கடைசியில் 108-ல் பரலோகம் அனுப்பி வைத்த காதலன் #illegalaffair #108ambulance நகை, பணத்தை திருப்பிக் கேட்டதால் வாய்க்காலில் தள்ளி பெண் கொலை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, நகை மற்றும் பணத்தைத் திருப்பிக் கேட்ட பெண்ணை, வாய்க்காலில் தள்ளி கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்... கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 40 வயதான கீதாவின் கணவர் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், கோவையைச் சேர்ந்த மெக்கானிக் கதிரவன் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது... இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது... இதற்கிடையே, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கீதா அளித்த புகாரின் பேரில் கதிரவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கீதாவே அவரை ஜாமினில் வெளியே எடுத்துள்ளார். இந்த நிலையில், கீதாவின் நகைகளை வாங்கி விற்றதுடன், பணம் கொடுக்கல், வாங்கலிலும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நகை மற்றும் பணத்தைத் திருப்பிக் கேட்டு கீதா தொடர்ந்து தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த கதிரவன், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக, திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் பகுதிக்கு கீதாவை அழைத்துச் சென்ற கதிரவன், அங்கு ஏற்பட்ட தகராறின்போது அவரை வாய்க்காலில் தள்ளிவிட்டுள்ளார். பின்னர், கீதா தவறி விழுந்துவிட்டதாகக் கூறி 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கீதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கீதாவைக் கால்வாயில் தள்ளிக் கொலை செய்துவிட்டு கதிரவன் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, குடிமங்கலம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து கதிரவனைக் கைது செய்துள்ளனர்.

"அட ஆமாங்க சீனாவும் நாங்களும் மாத்தி மாத்தி.." முகம் எதிரே சொன்ன டிரம்ப்..தர்ம சங்கடமான ஜி ஜின்பிங்

Chennai சர்வ சாதாரணமாக எடுத்து செல்லப்பட்ட ரூ.140 கோடி பெறுமானம் - சென்னையில் அதிர்ச்சி

கரூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை - கடிதம் கண்டெடுப்பு

ATM Theft நள்ளிரவில் கும்மிடிபூண்டி ATMஐ உலுக்கிய கொள்ளையன் - ஒருவரை பிடித்து துருவும் போலீஸ்

Child | 3 வயது பிஞ்சின் கைகளை கட்டி போட்டு மிருகம் போல் தாக்கிய பெண் - அதிரடியாக தூக்கிய போலீஸ்