சமீபத்திய செய்திகள்

Husband Wife Fight| சரக்கு அடிக்கும் போது நண்பன் விட்ட வார்த்தை.. மனைவியை வெட்டி வெறிதீர்த்த கணவன்

Husband Wife Fight| சரக்கு அடிக்கும் போது நண்பன் விட்ட வார்த்தை.. மனைவியை வெட்டி வெறிதீர்த்த கணவன்

thanthitv

சரக்கு அடிக்கும் போது நண்பன் விட்ட வார்த்தை.. நேராக வீட்டுக்கு சென்று மனைவியை வெட்டி வெறிதீர்த்த கணவன் #husbandwife #husbandwifefight திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 3வது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ​எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்த சுவேதா என்பவர் முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், இரண்டாவது கணவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரை சுவேதா கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 3வது திருமணம் செய்துள்ளார். பாண்டியன் நகரில் இருவரும் வசித்து வந்த நிலையில், அஜித்குமார் நண்பர்களுடன் மது அருந்திய போது , அவர்கள் சுவேதாவின் நடை குறித்து தவறாக கூறவே... ஆத்திரமடைந்த அஜித்குமார், வீட்டிற்குச் சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அவர் சுவேதாவின் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அஜித்குமாரை கைது செய்தனர்.

Ramayana Movie Collection | ஆறே நாளில் அசால்ட்டாக ஜெயிலர்-2 வசூலை நெருங்கிய `ராமாயணா’

Gem Veeraman Case| நேரில் வரும் ஜெம் வீரமணி, சாந்தி

Samayapuram| Diwali| தீபாவளியில் உலுக்கிய இரட்டை கொலை... புல்லட்டை இறக்கி கதறவிட்ட காவல்துறை

Gingee Girl Update| செஞ்சி சிறுமி விவகாரத்தில் அதிரடி திருப்பம்.. கிராம மக்களுக்கு பிறந்த நம்பிக்கை

Chennai Crime கள்ளக்காதல் விவகாரம் - சென்னையில் சரமாரியாக குத்தி கொல்லப்பட்ட இளைஞர்