farmers | protest | கண்களில் கருப்பு துணி கட்டி அரசுக்கு எச்சரிக்கை ஆற்றில் இறங்கி நூதன போராட்டம் #farmers #protest #mayiladuthurai மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று நாட்களில் காவிரி ஆறு வறண்டு போனதைக் கண்டித்து, விவசாயிகள் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு ஆற்றின் உள்ளே இறங்கி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மேற்கு மாவட்டங்களிலேயே அதிகமாக எடுக்கப்படுவதால் மயிலாடுதுறைக்கு நீர்வரத்து தடைபட்டு சம்பா சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். போதிய தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுவதைத் தடுக்கக் கோரியும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கோரிக்கைகள் ஏற்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்