Erode | Anthiyur | அந்தியூரில் முதிய தம்பதியை தாக்கி பள்ளத்தில் தள்ளிய 3 பேர் கைது #Erode #Anthiyur #TNPolice ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கம்மங்கூழ் குடித்துவிட்டு பணம் தராததைக் தட்டிக்கேட்ட முதிய தம்பதியைத் தாக்கி 8 அடி பள்ளத்தில் தள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அந்தியூரில் தள்ளுவண்டியில் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வரும் துரைசாமி - சாந்தி தம்பதியிடம், இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் கம்மங்கூழ் குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். இதனை தம்பதியினர் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அக்கூட்டம், இருவரையும் கொடூரமாகத் தாக்கி அருகிலிருந்த 8 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டுத் தப்பியோட முயன்றது. படுகாயமடைந்த தம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்கிய அன்புமணி என்பவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய கார்த்தி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் சம்பவம் நடந்த 5 மணி நேரத்திற்குள் தேடிக் கண்டுபிடித்த அந்தியூர் போலீசார், கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.